சஞ்சலம்

mental agitation, trouble, distress, perturbation, vexation - மனக் கலவரம், உலைவு, சலனம் commotion - குழப்பம் sorrow, grief, trouble - துன்பம்

sorrow, grief, affliction disease, ailment trembling, shivering

Winslow (1862)

சஞ்சலம் (cañcalam) — noun
  1. Motion, agitation, trembling, shaking, அசைவு
  2. (fig.) Fickleness, unsteadiness, நிலையில்லாமை
  3. Lightning, மின்னல். W. p. 314. CHANCHALA
  4. (c.) Sorrow, grief, anxiety, concern, care, trouble, மனக்கவலை
  5. Pain, disease, ailment, துன்பம்
  • சஞ்சலக்காரன் — A person of grief or with disease.
  • சஞ்சலபுத்தி — An irresolute and wavering mind, fickleness. (p.)
  • சஞ்சலப்பட — To be agitated. 2. To be afflicted, troubled, distressed.
  • சஞ்சலிக்க — To be agitated, &c.–as சஞ்சலப்பட. (Little used.)
  • மனச்சஞ்சலம் — Grief. அவன் சஞ்சலமாய்க் கிடக்கிறான். He is seriously ill.

Fabricius (1972)

சஞ்சலம் — noun
  1. motion, shaking, fluctu- ation of the mind, அசைவு
  2. fickleness, நிலையில்லாமை
  3. sorrow, grief, trouble, கவலை
  4. disease, வியாதி
  • சஞ்சலக்காரன் — a person in distress.
  • சஞ்சலப்பட–மாயிருக்க–சஞ்சலிக்க — to be doleful, sad, sorry; to be agitated, distressed or troubled.
  • சஞ்சலப்படுத்த — to trouble, vex, harass.
  • சஞ்சலப்புத்தி — an irresolute wavering mind.
  • சஞ்சலரஹிதன்–ரகிதன் — a person of undisturbed equanimity.
  • மனச் சஞ்சலம் — grief.

Tamil Moli Akarathi (1928)

சஞ்சலம் (cañcalam)
  1. அசைவு, காற்று, சுடலையிற் கொண்டு போகும்பால், துன்பம்,நிலை யில்லாமை, மனக்கவலை, மின்னல்
சஞ்சலம் (cañcalam)
  1. சங்கு, வலம்புரி யாயிரஞ் சூழ்ந்த சங்கு

IndoWordNet

சஞ்சலம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
சஞ்சலம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
சஞ்சலம் — noun
  1. வருத்தும் துன்பம்.
சஞ்சலம் — noun
  1. நிம்மதி இழந்த நிலை அல்லது உறுதியற்ற நிலை
சஞ்சலம் — noun
  1. சஞ்சலமாக இருக்கும் நிலை

கவலை துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை பிரயாசம் வாதை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சஞ்சலம் (cañcalam) — noun
  1. < cañcala
  2. Fickleness, unsteadiness; நிலையின்மை
  3. Rapid motion; விரைந்து அசைகை
  4. Trembling, shivering, tremulousness; நடுக்கம். (உரி. நி.)
  5. Sorrow, grief, trouble; துன்பம். சாந்துணையுஞ் சஞ்சலமே தான் (நல்வழி, 28)
  6. Disease, ailment; வியாதி. அவன் சஞ்சலமாய்க் கிடக்கிறான். (W.)
சஞ்சலம் (cañcalam) — noun
  1. (யாழ். அக.)
  2. Wind; காற்று
  3. Lightning; மின்னல்