துக்கம்

1)sorrow, 2)grief, 3)agony(ஆங்)caused due to death of loved ones etc., which can not be made good (replaced) விளக்கம் வடமொழிச் சொல். ஈடு செய்ய முடியாத இழப்பினால் ஏற்படக்கூடிய துயரம் துக்கம் எனப்படும். அவ்வாறே ஈடு செய்யக்கூடிய இழப்பால் ஏற்படும் துயரத்திற்கு சோகம் என்பர். ஆகவே மகனை இழந்தால் அது புத்திர சோகம். கணவனை இழந்தால் அந்நாளைய நடைமுறைப்படி மறுமணத்தடை பெண்களுக்கு இருந்ததால் அது அவர்களுக்கு துக்கம்.

sorrow, distress, grief disease the doctrine that existence is painful, dukkha

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துக்கம்¹ (tukkam) — noun
  1. < duḥkha
  2. Sorrow, distress, affliction; துன்பம். (சூடா.) துக்கமித் தொடர்ச்சி யென்றே (கம்பரா. கும்பகருண. 142)
  3. Hell; நரகம். (W.)
  4. Disease; நோய். (யாழ். அக.)
  5. (Buddh.) The doctrine that existence is painful, one of four vāymai, q.v.; வாய்மை நான் கனுள் உலகப்பிறப்பே துக்கமென்று கூறும் பௌத்த மதக்கொள்கை. (மணி. 2, 64, உரை.)
  6. Consumption; க்ஷயரோகம். (சிறுபஞ். 76.)
துக்கம்² (tukkam) — noun
  1. prob. dyu + kha. Sky; ஆகாசம். நிலந்துக்க நீர்வளி தீயானான் (தேவா. 844, 3).

Winslow (1862)

துக்கம் (tukkam) — noun
  1. Sorrow, distress, grief, sadness, regret, dejection, விசனம்
  2. Pain, anguish especially of the mind, உபத்திரவம். (c.) W. p. 413. DUHKHA
  3. Hell, நரகம்
  4. Defect, fault, natural or moral, குற்றம்.–Note. துக்கத்திரயம், three species of sorrow are mentioned, for which see தாபத்திரயம்
  • துக்கஉடுப்பு — A morning dress.
  • துக்ககன் — One who is sad, one who is of a melancholy temper. (R.)
  • துக்கக்காரன் — A mourner.
  • துக்கக்கோலம் — A morning state.
  • துக்கங்கொண்டாட–துக்கங்காக்க — To mourn, express sorrow by exterior marks, to lament.
  • துக்கசாகரம் — A sea of grief. துக்கசாகரத்தில்முழுகினான். He is overwhelmed with grief.

Fabricius (1972)

துக்கம் — noun
  1. sorrow, distress. grief, mour- ning, விசனம்
  2. pain, உபத்திரவம்
  3. hell, நரகம்
  4. fault, a defect, குற்றம்
  • துக்கக்காரன் — a mourner.
  • துக்கங்காண — to pay a visit of con- dolence.
  • துக்கங்கொடுக்க — to receive a visit of condolence; 2. to cause grief.
  • துக்கங்கொண்டாட–துக்கங்காக்க — to mourn, to lament over the dead, .
  • துக்கசாகரம் — sea of grief.
  • துக்கசாகரத்தில் முழுக — to be over- whelmed with sorrow.

Tamil Moli Akarathi (1928)

துக்கம் (tukkam)
  1. கிலேசம்,குற்றம், துன்பம், நரகம், நோ
துக்கம் (tukkam)
  1. குற்றம், துன்பம், நரகம்

IndoWordNet

துக்கம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
துக்கம் — noun
  1. மகிழ்ச்சியில்லாத நிலை
துக்கம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
துக்கம் — noun
  1. மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துன்ப உணர்வு.
துக்கம் — noun
  1. மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு அல்லது மனதை வருந்தச் செய்யும் உணர்வு

கவலை துயரம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை பிரயாசம் வாதை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துக்கம்
  1. துன்பம்
  2. வாய்மை நான்கனுள் உலகப் பிறப்பே துன்பம் என்று கூறும் பெளத்த மதக்