கவலை
வருத்தம்,உளைச்சல் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவி worry, anxiety
care, anxiety, solicitude distress, affliction concern, interest
Tamil Wiktionary
கவலை
வருத்தம்,உளைச்சல் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவி
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கவலை¹ (kavalai) — noun
Care, anxiety; விசாரம் Distress, affliction; மனச்சஞ்சலம். மனப்பேரின்பமுங் கவலையுங் காட்டும் (மணி. 30, 63) Wandering thought; பலநினைவு. கவலைகொணெஞ்சினேன் (கலித். 134, 13) Concern, interest; அக்கறை. அவனுக்குக் கல்வி யிற் கவலையில்லை Fear, dread; அச்சம். (திவா.) Place where several ways meet; பலதெருக் கூடுமிடம். கவலைமுற்றங் காவனின்ற (முல்லைப். 30) Diverging roads; கவர்த்த வழி. மன்றமுங் கவலை யும் . . . திரிந்து (சிலப். 14, 214) Branch, forking of branches, fork; மரக்கிளை. (பிங்.) Italian millet. See செந்தினை. (பிங்.) Sections in the Vēda wherein the same word or words recur, thereby giving room for the reciter to divaricate; வேதமோதும்போது பல பிரகணங் களில் ஒரேசொல்லோ தொடரோ வருமிடத்து நேரக் கூடிய குழப்பம். அவர் வேதத்திற் கவலைநேராமற் சொல் லக் கூடியவர்
கவலை² (kavalai) — noun
A rooted creeper; கிழங்குள்ள ஒருவகைக்கொடி. ஆய்கொடிக் கவலையும் (சிலப். 11, 82) Malabar Sardine of beautiful green colour, attaining 7 in. in length, Dussumieria acuta; சிறு கடல்மீன்வகை
கவலை³ (kavalai) — noun
A kind of waterlift. See கபிலை¹.
Winslow (1862)
கவலை (kavalai) — noun
Care, anxiety, solicitude, விசாரம் Regret, sorrow, distress, affliction, grief, துன்பம் A kind of creeping plant with a beautiful flower and yielding an edible root, ஓர்கொடி Red millet, செந்தினை Concern, அக்கறை (p.) Fear, dread, அச்சம் Disease, pain, நோய் A basket of leather to draw water, நீரிறைக்குந் தோற்கூடை Cross roads, சந்தி Diverging roads, கவர்வழி A branch, the forking of branches, a fork, மரக்கொம்பு. இப்போதுனக்குக்கவலையில்லாததாலிதையெழுது.... Write this since thou art not otherwise occupied
கவலைகொள்ள — To be concerned, anxious, sorrowful; to regret. கவலைப்பட — To be concerned, be solicitous, be anxious, to care. 2. To lament, sorrow, regret. கவலைபாய்ந்துபோக–கவலையாயிருக்க — To be careless or confused. கவலையேற்றம் — A machine for drawing water by a rope, passing over a wheel and attached to a leathern basket. தீராக்கவலை — Unceasing, unabating, interminable sorrow.
Fabricius (1972)
கவலை — noun
care, concern, அக்கறை anxiety, perplexity, விசாரம் sorrow, affiction, துன்பம் a leather bag to draw water diverging roads fork Italian millet, செந்தினை
கவலைப்பட–கொள்ள — to be anxious sorrowful; to care. தீராக்கவலை — unceasing care and anxiety. கவலைக்கிடமான நிலைமை — grave critical situation. கவலையேற்றம் — a kind of waterlift.
Tamil Moli Akarathi (1928)
கவலை (kavalai)
அக்கறை, அச்சம், ஒருகொடி, ஒருமீன், சுவர்வழி, சிலேசம், சந்தி, செந்தினை, துன்பம், நீரிறைக்குந் தோற்கூடை, நோய், மரக்கொம்பு, விசாரம்
கவலை (kavalai)
அச்சம், ஓர்வகைக்கொடி, கவர் வழி, சந்தி, செந்தினை, துன்பம், நோய் மரக்கொம்பு
கவலை (kavalai)
இளமை, மெலிவுள்ளது
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கவலை
வருத்தம் மனச்சஞ்சலம் பல நினைவு
சொல் அகராதி
சொல் தேடு