அவலம்

suffering, pain, distress, plight, misery - துன்பம் poverty, want - தரித்திரம் weeping, sorrow - அழுகை

regrettable state; pathetic condition suffering, distress

Winslow (1862)

அவலம் (avalam) — noun
  1. [priv. அ, et பலம், strength.] Weakness, feebleness, பலவீனம்
  2. Suffering, pain, sorrow, distress, extreme sympathy, துன்பம்
  3. Fainting, swooning, syncope, சோர்வு
  4. [in rhetoric.] Despair, dismay, intense grief, one of the nine passions or emotions. See இரசம். (p.)
  • அவலக்கடல் — Sea of distress. (சத. 67.)

Fabricius (1972)

அவலம் — noun
  1. அ+பலம், asylum, பலவீனம்
  2. calamity, துன்பம்
  3. disease

Tamil Moli Akarathi (1928)

அவலம் (avalam)
  1. ஓரலங்காரம்
  2. அஃது துயரந் தோன்றக் கூறுவது
  3. கிலேசம், கேடு நோய், மிடி, வருத்தம்
அவலம் (avalam)
  1. நோய்

IndoWordNet

அவலம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
அவலம் — noun
  1. மகிழ்ச்சியில்லாத நிலை
அவலம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
அவலம் — noun
  1. மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு அல்லது மனதை வருந்தச் செய்யும் உணர்வு
அவலம் — noun
  1. வருத்தும் துன்பம்.

கவலை துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை பிரயாசம் வாதை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவலம்
  1. துன்பம்
  2. வறுமை
  3. பலவீனம்
  4. கவலை
  5. கேடு
  6. குற்றம்
  7. நோய்
  8. அழுகை
  9. அவலச்சுவை
  10. மாயை
  11. பயன்படாது ஒழிதல்
  12. இடப்பக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவலம்¹ (avalam) — noun
  1. cf. a-bala
  2. Suffering, pain, distress; துன்பம். செய்வினை முற்றாம லாண்டோ ரவலம் படுதலு முண்டு (கலித். 19)
  3. Poverty, want; தரித்திரம். கெடுகநின் னவலம் (பெரும்பாண். 38)
  4. Weeping, sorrowing; அழுகை. அவலங்கொண் டழிவலோ (சிலப். 18, 41)
  5. Illusion; மாயை. (மதுரைக். 208, உரை.)
  6. Care, anxiety; கவலை. நெஞ்சத் தவல மிலர் (குறள், 1072)
  7. Fault; குற்றம். அஃதவலமன்றுமன (கலித். 108)
  8. Sickness, disease; நோய். (பிங்.)
  9. (Poet.) Pathetic sentiment, one of eight mey-p-pāṭu, q.v.; சோகரசம். (தொல். பொ. 251, உரை.)
அவலம்² (avalam) — noun
  1. Weakness, faintness, feebleness; பலவீனம். (W.)
அவலம்³ (avalam) — noun
  1. That which becomes fruitless, unprofitable; பயன் படாதொழிவது. கற்றதுங் கேட்டது மவலமாய்ப் போத னன்றோ (தாயு. சச்சி. 5).