குறி

குறிப்பு செயலைச் செய், அடையாளம் செய். அவன் குறித்தான் (he remarked)

to design, to determine, to appoint, to ascertain to mark, to note to intend, to contemplate, to consider

Tamil Wiktionary

குறி

குறிப்பு குறியிடு குறியீடு குறிக்கோள் அடையாளக்குறி ஆடைக்குறி சேங்கொட்டைக்குறி எண்குறி ஒலிக்குறி அளவுக்குறி சூட்டுக்குறி இடுகுறி காரணக்குறி காரணவிடுகுறி காலக்குறி குணங்குறி தற்குறி கையெழுத்துக்குறி நூற்குறி குழூஉக்குறி அறிகுறி முன்குறி முன்னறிகுறி கெடுகுறி தீக்குறி துர்க்குறி துற்குறி தீமைக்குறி நற்குறி கேடுணர்த்துங்குறி ஆப்பைக்குறி சாக்குறி மரணக்குறி முற்றுக்குறி கேள்விக்குறி காற்குறி அம்புக்குறி வினாவிசைக்குறி இயைபிலிசைக்குறி உறுப்பிசைக்குறி மெய்ப்பாட்டிசைக்குறி தொடரிசைக்குறி விளக்கிசைக்குறி முடிப்பிசைக்குறி வியப்புக்குறி எதிர்க்குறி நெடிற்குறி நீட்சிக்குறி புள்ளடிக்குறி உடற்குறி முகக்குறி கைக்குறி விரற்குறி நெற்றிக்குறி நுதற்குறி பொட்டுக்குறி சொற்குறி ஞாபகக்குறி நகக்குறி பற்குறி தந்தக்குறி ஆண்குறி பெண்குறி சுழிக்குறி அபிநயக்குறி அச்சக்குறி கோபக்குறி சினக்குறி வேர்க்குறி சௌக்கியக்குறி கடுமைக்குறி வெருட்டுங்குறி வெறுப்புக்குறி சம்மதக்குறி வீரக்குறி வெற்றிக்குறி செயக்குறி தடுத்தற்குறி தூக்கக்குறி நோய்க்குறி நோய்க்குணக்குறி சுரக்குறி அவக்குறி தீட்டுக்குறி சிவக்குறி அருட்குறி சூலக்குறி விடைக்குறி பல்லிவிழுகுறி சோதிடக்குறி நட்சத்திரக்குறி நாடிக்குறி முத்துக்குறி நெற்குறி நிலக்குறி நீர்க்குறி மண்குறி மழைக்குறி வில்லடிக்குறி கலப்பைக்குறி பட்டிக்குறி சாணிப்பாற்குறி திருட்டுக்குறி பட்டவன்குறி பிரேதக்குறி இரவுக்குறி பகல்குறி பகற்குறி அல்லகுறி அலர்க்குறி புணர்குறி ஒருகுறி கம்பிக்குறி பெருங்குறி மாராயக்குறி விற்குறி வடமேற்றிசைக்குறி வியாபாரக்குறி விலைமதிப்புக்குறி

Winslow (1862)

குறி (kuṟi) — noun
  1. Mark, sign, stamp, symbol, token, emblem, indication, அடையாளம்
  2. Idea, notion, intention, suggestion, hint, insinuation, குறிப்பு
  3. Omen, presage, prognostic, forerunner, சகுனம்
  4. Personal qualities, character, குணம்
  5. A time, a turn–as in ஒருகுறி, once, தரம்
  6. Time, days, season–as in இக்குறி, now-a-days, காலம்
  7. [in gram.] A word, a term; appellation, designation–as in இடுகுறி, காரணக் குறி
  8. Assertion of a speculative truth –as matter of fact, in constradistinction to செய்கை, a practical precept, இவைஇன்னனவென மனத்தாற்றெளிந்துரைப்பது
  9. The sexual emblems, ஆண்பெண்குறி
  10. Mark to shoot at, இலக்கு
  11. [in gram.] A short letter. (See குறில்.)
  12. [prov.] Stripes, lashes, அடி
  • அகப்பைக்குறி — Prognostication by observing the position and direction of a ladle let fall perpendicularly–as commonly practised by women.
  • ஆடைக்குறி — A line across the ends of a cloth.
  • கைக்குறி — Omens by lines on the palms; palmistry.
  • முகக்குறி — Indications from the face.
  • துர்க்குறி — A bad sign, a bad omen.
  • நற்குறி — A good sign, a good omen.
குறி (kuṟi) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To design, intend; to contemplate, consider, think, கருத
  2. To imagine, to conceive, மதிக்க
  3. To appoint, determine, decree, விதிக்க
  4. To note down; to make the first draught in writing; to sketch an out- line in painting, to trace, குறித்துக்கொள்ள
  5. To refer to, to denote, suggest, specify. சுட்டிக்காட்ட
  6. To designate, to characterize, to denominate, to name, பெயர் குறிக்க
  7. To address one's self–as in prayer; to have reference to–as a procuring cause, நோக்க
  8. To foretell, to presage, to prognosticate by astrology, palmistry, augury, &c., முன்னறிவிக்க
  9. To blow–as a chank, &c., ஊத. செவிடன்காதிலேசங்குகுறித்தாற்போல. Like blowing a chank to a deaf man–it being useless. அதைக்கனவிலுங்குறிக்கவில்லை. I did not even dream of it. இதிலேஅவர்குறிக்கிறதென்ன. What does he mean by it? குறிக்குங்கால். If we consider. (வைரா.)
  • குறித்துக்கொள்ள–குறித்துவைக்க — To note down. ஏழுதுகோலாலேகுறித்துக்கொண்டான். He formed with a graving tool. Rott.
  • குறித்தகள்வன் — A notorious thief.
  • குறித்தகாரியம் — The particular thing. 2. The business in hand.
  • குறித்தகாலம் — The appointed time. 2. The proper season.
  • குறித்ததொகை — The sum specified.
  • குறித்தபோகங்கள் — Destined enjoyments. 2. The proper harvests.

Fabricius (1972)

குறி — noun
  1. sign, அடையாளம்
  2. a mark to shoot at, an aim, இலக்கு
  3. a prognostic, omen, சகுனம்
  4. character, personal qualities, குணம்
  5. the sexual emblems, ஆண்பெண்குறி
  6. doctrine மதக்கொள்கை
  7. stripes, lashes, அடி
  • குறிகாரன் — one skilled in aiming a good marksman.
  • குறிகேட்க — to consult a fortune-teller.
  • குறிகெட்டவன் — an unprincipled man.
  • குறிக்கட்டு — a knot attached to a money bag.
  • குறிக்கொள்ள — to set one's heart on a pursuit and centre attention on it.
  • குறிக்கோள் — concentration, comprehension; strenuous perseverance in any pursuit; an ideal; wisdom, sagacity.
குறி — v. t.
  1. v. t. appoint, determine, design, நியமி
  2. place a mark, note down, குறித்துக்கொள்
  3. intend, purpose கருது
  4. denote, refer to, சுட்டிக் காட்டு
  5. foretell, presage, முன்ன றிவி
  6. blow as a conch, sound, ஊது
  • இதிலே அவன் குறிக்கிறதென்ன — ? what does he mean by this?
  • குறித்த காலத்திலே — at the appointed time.
  • குறித்த தொகை — the sum specified.
  • குறித்து — concerning, about.
  • அதைக்குறித்துச் சொன்னான் — he spoke about it, or concerning it, he described it.
  • அவனைக்குறித்து — concerning him.

Tamil Moli Akarathi (1928)

குறி (kuṟi)
  1. அடையாளம், ஆண்பெண்குறி ஏண்ணம் ஒருவகைச்சாத்திரஞ்சொ ல்லுதல், குணம், குறிப்பு, குறியென் னேவல்,சகுனம், தோற்றம், நன் னடத்தை,நிமித்தம், பயில்,புடவை, மாடு முதலியவற்றினிடங், குறி, மு றை
குறி (kuṟi)
  1. அடையாளம், குறிப்பு, குறியென் னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குறி² (kuṟi) — noun
  1. < குறி-
  2. Mark, sign, stamp, emblem, token, symbol, indication, designation; அடையாளம். (பிங்.)
  3. Aim, mark to shoot at; இலக்கு. கூரிய குணத்தார் குறிநின்றவன் (தேவா. 356, 3)
  4. (Akap.) Secret appointment by lovers, tryst; குறியிடம். (தொல். பொ. 130.)
  5. Goal, destination; உத்தேசித்த இடம். சென்று மீளாக் குறி (கம்பரா. கடிமண. 49)
  6. Motive, intention; நோக்கம்
  7. Suggestion, hint, insinuation; குறிப்பு
  8. Doctrine; மதக்கொள்கை. குறிபலவுங் கொளுவினார் (பெரியபு. திருநா. 38)
  9. Omen, presage, prognostic; முன்னறிந்துகூறும் நிமித்தம். குறியிறைப் புதல்வரோடு (குறுந். 394)
  10. Assembly, village council; சபை. மத்யஸ்தரைக்கொண்டு குறி கூட்டி (சோழவமி. 55)
  11. Turn, occasion; தடவை. ஒருகுறி கேட்போன் (நன். 42)
  12. Time, days, season, as in இக்குறி, now-a-days; காலம். (W.)
  13. Character, principle of conduct; ஒழுக்கம். குறிகெட்டவன். (W.)
  14. Generative organ; ஆண்குறி அல்லது பெண்குறி
  15. Stripes, lashes; அடி. (J.)
  16. Definition, accurate description; இலக்கணம். குறியறிந்தோரே (தொல். பொ. 47)
குறி (kuṟi) — noun
  1. Measure; அளவு. ஸர்வேஸ்வரனுக்கும் கைக்குறி யாப்பை வாங்குவது இங்கேயிறே (ஈடு, 1, 4, 6).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குறி
  1. அடையாளம்
  2. இலக்கு
  3. குறியிடம்